திருக்குறள் இன்று..

########################################
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல;
என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.



Explanation:
Like the darkness waiting for the end of the light in the lamp;
the malady of severance is waiting for the end of embrace of my lover.

திருக்குறள் இன்று..

########################################
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம், என்னும் நான்கும்;
தாம் அழிந்து விடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.



Explanation:
Sluggishness, Procrastination, Forgetfulness and Slumber are the four Ships;
which the people, who want to destroy themselves will ride.

திருக்குறள் இன்று..

########################################
பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. (1083)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
"கூற்று" என்பதை இதன்முன்னர் அறியேன், இப்போது அறிந்து விட்டேன். அது;
அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.



Explanation:
I don’t know how “Death” will look like. But now I fully understand that;
It comes in the form of beautiful lass with immense eyes.

சிற்றம்பல மேடையில் தமிழ் (ஏற்றம் !!) இறக்கம் !!

சிற்றம்பல மேடையில் தமிழ் ஏற்றம் !! இறக்கம் !!

சட்டம் போட்டாயிற்று !!
ஆணையர் ஆணையும் உண்டு !!
இருந்தும் ......
தேவாரம் பாடி தமிழை சிற்றம்பலத்தில் ஏற்றி விட வந்த ஆ.சாமி அடிப்பட்டு வந்திருக்கிறார்.
அரசு கணக்குக்காட்டிருக்கிறது, தமிழ் பாடப்பட்டதென்று !!
கடவுளை பார்க்கமுடியாமல், தடுத்து நின்ற தீட்சிதர்களை பார்த்து தமிழ் பாடப்பட்டது !!

இந்தகூத்துக்கள் ஒருபுறமிருக்க, எல்லோரும் சென்றபின் என்ன நடந்திருக்கும் ?
தமிழ் பாடப்பெற்ற இடமெல்லாம் தண்ணீரும் பாலுமாய் கழுவி தீட்டு கழிக்கப்பட்டிருக்கும்.
“நீச பாக்ஷை” கேட்டுவிட்ட (?) (தீட்சிதர்களுடைய கூச்சலை மீறி) கடவுளுருவுக்கு சந்தனம், இளநீர், பால் கொண்டு பாவம் போக்கப்பட்டிருக்கும்.

தமிழுக்கு ஒரு அவமாணம் !!
தமிழின துரோகிகளை பூண்டோடு ஒழிக்கவேண்டும் !!
அந்த கூட்டத்தின் வால் நறுக்கப்பட வேண்டும் !!
என்று கன்னம் துடிக்க உணர்ச்சிவசப்படுவதை விட……..

யோசிக்கணும்…..

உணர்ச்சிவசப்பட்டு, ஒரு மொழியை எதிர்த்து வேற மொழி வந்தது போல ஆக கூடாது.

தமிழிலே பாடறது சட்டபூர்வமாகனும், சட்டத்தை எதிர்த்தா என்ன ஆகும்முனு தெரியவெக்கனும்!
‘இருக்கறவன் தர மாட்டான்
பசிச்சவன் விட மாட்டான்’ கிற கதையாகனும்.
கடவுளை நம்பரமோ! இல்லையோ! தமிழுக்கான உரிமையை பெற துணை செய்யனும்!

இந்த உலகம் மாயைனு சொல்றவுங்க, இந்த அற்க உடலோடு அழிஞ்சு போற (தேவ) மொழியை பத்தி ஏன் இவ்வளவு கவல படனும்?
நந்தனார் மோட்சம் (?) ரொம்ப ரொம்ப பழைய கதை! (எல்லாருக்கும் அது கதையினு தெரியும்). பொற்காலத்த பரண் மேல போட்டுட்டு நிகழ்காலத்துக்கு வாங்க!!

திருக்குறள் இன்று…

########################################
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். (949)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
மருத்துவத்தைக் கற்றறிந்தவன்,

• நோயாளியின் சக்தியையும்,
• நோயின் தன்மையையும்,
• காலத்தின் இயல்பையும்,

நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.


Explanation:
A good Physician should look,

• Patient’s strength
• Character of the Disease
• Time frame

and research about it before giving treatment.

தேடல்...

நான் வாழ்க்கையை தேடுகிறேன்!

நதியில், வனத்தில், மக்களிடம்

நான் வாழ்க்கையை தேடுகிறேன்!
கனவு வெளியில் மிதந்துகொண்டே

ஆனால்..
அது மெதுவாக தேய்கிறது, காட்டில்
தொலைந்த ஒத்தையடி பாதைபோல

ஆசை என்னும் சக்கரம் கட்டி
ஓட்டமாய் ஓடுகிறேன், தூரபச்சை
பார்த்துக்கொண்டே சுற்றம் தெரியா
குருடனாய் ஓடுகிறேன்!
பௌர்ணமியின் நினைவிலேயே,
மூன்றாம் பிறையை மறந்துநிற்கிறேன்

ஓட்டத்தை நிறுத்திவைத்த அந்த ஊர்புரத்தின்
ஓங்கிய புளியமரத்தின்........... புத்தனானேன்கண் திறந்துவிட்டது....
மாளிகை கனவை சுவரோரமாய் சாய்த்துவைத்து
ஓரரைசன்னலில் மழைரசிக்க பழகுகிறேன்,
கடல்தான் கனவென்றாலும், ஓடியவழியெல்லாம்
கரை சிறந்த பாய்கின்ற நதியாக

- மெய் புங்காடன்

திருக்குறள் இன்று…

########################################
கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். (1061)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண் போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல்;
வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.



Explanation:
It would be better if you tolerate the deprivation, than to plead to the one who;
bestows, without concealing all the wealth with bliss.


P.S. He is like “Eye”; one should stand with dignity and not fall to plead.