தனித்திரு! விழித்திரு!

நான் அவளை பார்த்தேன்!
புதிரோ ரகசியமோ அந்தமுகத்தில்
புதிரை படித்தேன் புரியவில்லை
படித்தேன் மீண்டும் மீண்டும்!

விடை கிடைக்க காத்திருந்தேன்.....
கடந்துபோன அக்கடைசி தருணத்தில்..
கடைக்கண் காட்டிவிட்டாய்!

அம்மணித்துளி....................
நான் அவளை பார்த்தேன்
அவள் என்னை பார்த்தாள்
சொர்க்கம் என்னை பார்த்தது!

பேச துடிக்கிறேன்! பக்கமிருக்க விழைகிறேன்!
தனியே வருவாய்என நான்நிற்க,
தோழியரோடு கூடி நிற்கிறாய்!

என் வானவில்லில் மூன்றே நிறங்கள்
பச்சை, சாம்பல், வெளிர் சிவப்பு
உன் ஆடைகள்! என் வண்ணங்கள்!
உன் அசைவுகள்! என் காவியங்கள்!


என்னை ஏன் பாடாய் படுத்துகிறாய்
பதிலை எண்ணி மறுங்குவதை விடுத்து
கேள்வி கேட்பதே இங்கே கேள்விகுறி!
ஆம்என்றால் நான் இறைக்குநிகர்
இல்லை என்றால்.................

ஒரேநிமிடம் பெண்ணே! ஒரேநிமிடம்!
தனித்திருக்க மாட்டாயா? என் தவிப்பை,
புரிந்திருக்க மாட்டாயா?

இதயம் இரஞ்சுகிறது, அறிவு தவிக்கிறது
பெண்ணே புரிந்துகொள்!
தனித்திரு! விழித்திரு! என்கிறான் பாரதி
பெண்ணே புரிந்துகொள்!

- மெய் புங்காடன்

0 மறுமொழிகள்: