பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர்.
மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் இருட்டடிப்பு செய்யப்படும் என கன்னட ரக்சன வேதிகே என்கிற கன்னட வெறியர் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதற்கு நேற்று சென்னையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஓகனேக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
இதையடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் இன்று பெங்களூரில் வன்முறையில் குதித்தனர். சேஷாத்ரிபுரம் பகுதியில் குவிந்த அவர்கள் அங்குள்ள நடராஜ் மற்றும் வினாயக் ஆகிய தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த கண்ணாடி ஷோ கேஸ்களை அடித்து உடைத்தனர். தியேட்டர் இருக்கைகளையும் கிழித்தெறிந்தனர்.
பின்னர் அருகில் உள்ள கடைகளுக்குள் புகுந்த அக்கும்பல் அங்கு தமிழர்கள் வைத்துள்ள கடைகளையும் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. சேஷாத்ரிபுரம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி:- தட்ஸ்தமிழ்
பெங்களூரில் தமிழ் தியேட்டர்கள் மீது தாக்குதல்
திருக்குறள் இன்று..
########################################
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.(1191)
- திருவள்ளுவர்
#########################################
விளக்கம்:
தாம் விரும்பும் காதலர் தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள்;
காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப்பெற்றவர்கள் ஆவார்.
Explanation:
One whose love is reciprocated by an altruistic love, is one;
Who got a full ripe, sweet fruit sans seed!!
P.S. While other settles for an unripe fruit and some others settle for half ripe fruit, satisfied with the Seed inside.
நண்பனின் காதலி..( 2 )
முதல் பாகம் படிக்க.. நண்பனின் காதலி..
வாழக்கை வழக்கம் போல ஒடிக்கொண்டிருக்க, பின்புல வேலைகள் நடந்து கொண்டிருந்த்து. அப்பெண்ணிண் வீட்டையும் கண்டுபிடித்துவிட்டான் நட்பு, என் கஷ்ட காலம் என் வீட்டிலிருந்து மூன்றாவது தெரு தாண்டிப்போனால் அவள் வீடு.....
ஒரு ஞாயிற்றுகிழமை, அப்போது வேறு டி.வி.எஸ் 50 பழகிய நேரம் தனியாக ஓட்டுவேன், டபுள்ஸ் என்பது கஷ்டம் தான். அவனை ஏற்றிக்கொண்டு, தெருக்களில் தெரு நாய்களையும், சில தாத்தாக்களையும் திகிலடித்துவிட்டு, ரோட்டை அளந்து ஒரு வழியாக அவள் வசிக்கும் தெருவிற்கு வந்து சேர்ந்தோம். ஒரு மூன்று முறை வீட்டை சுற்றியும் அவள் கண்ணுக்கு அகப்படவில்லை. என்ன விடாகண்டனுக்கு வந்த சோதனை என்று கவலையோடு யோசிக்கவும், “துணையில்லாதவருக்கு தெய்வமே துணை” என …..
பிள்ளையார் கோயிலுக்கு பஜனை பாட போய்விட்டோம்….
மீண்டும் சென்று ஒரு மூன்று சுற்று,........ ம்ஹம் !! வேலையாகவில்லை.
கடவுளே !! என்ன ஒரு சோதனை ....
கடைசி.. கடைசியாக... இன்னும் ஒரு மூன்று முறை. சரி என்று ஆரம்பித்தால்...
பிள்ளையார் அருளோ !! யதோசையாகவோ !! அவள் எங்கேயோ வெளியில் சென்று கொண்டிருந்தாள். ஹீரோவின் நண்பன் என்ற முறையில் டி.வி.எஸ் யை அவன் கையில் கொடுத்து அவள் முன் சென்று ஒரு ஒடி ஒடித்து படங்காட்ட கிளப்பிவிட்டேன்...
மிகவும் வெயிட்டாக வண்டியை கிளப்பி வேகமாக சென்றான்......
அந்தோ பரிதாபம் வண்டி அவளை கடக்கும் முன்னே நின்று போய்விட்டது, அவள் பறந்து போய் விட்டாள். இன்னும் வண்டியை கிளப்ப போராடிக் கொண்டிருந்தான் நண்பன்.
கல்லூரியின் கடைசிக்கட்டத்திலும் அவனாய் போய் சொல்லவில்லை. ஹட்ச் நாய் போல தன் பின்னால் அழைவதை கண்ட அந்த பெண், அவள் அப்பாவிடம் சொல்ல, அப்பா இவனை மிரட்ட. சோகத்தில் முடிந்தது அந்த ஒருதலை ராகம்.
சென்னையில் அந்த பெண்ணை சந்தித்த போது, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச, அவள் சென்னையிலேயே வேலை செய்வதாக கூறினாள். தன் அலுவலகத்திற்கு நேரமாவதாகவும் கூறி வேக வேகமாக சென்று விட்டாள்.
யோசித்து பார்க்கையில் வாழ்க்கை எதற்காகவும், யாருக்காகவும் கண்ணீர் சிந்தாமல் சென்றுகொண்டே இருக்கிறது... நண்பனின் புலம்பல்கள், சந்தேகங்கள், டி.வி.எஸ் பயணம் என்ற சுவடுகளை ஏற்படுத்தி போகிறது...
அப்பெண்ணை எங்கு பார்த்தாலும் நண்பனின் காதலி என்றே ஞாபகத்திற்கு வரும்...
திருக்குறள் இன்று..
########################################
யாதனின் யாதனின் நீங்கயான் நோதல்
அதனின் அதனின் இலன். (341)
- திருவள்ளுவர்
#########################################
விளக்கம்:
எந்த எந்தப் பொருளில் ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ;
அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.
Explanation:
If One leave his desire for a particular thing / Person;
He is liberated from the grief occurred by that object / Person.
நண்பனின் காதலி..
நான் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. சென்னையில் ஒரு நண்பனின் திருமணத்தில் அவர்களை சந்தித்தேன். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும், வேறு துறை என்பதாலும், மேலும் நான் ஒரு ஹீரோ !! இல்லை என்பதாலும், என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அது ஆரம்பித்தது கல்லூரியின் கடைசி ஆண்டுகளில். நானும் என் நண்பனும் ஒரே ப்ராஜக்ட் (தமிழில்?), 7 மணிவரை வேலை பார்த்துவிட்டு பேருந்தில் செல்வது வழக்கம்.
பொதுவாக பெண்கள் இல்லாமல் வறண்டு கிடக்கும் இயந்திரவியல் பறவைகள், பசுமையை தேடி EEE மற்றும் E & I போன்ற துறைகளை தினமும் நாடுவதுண்டு. இதைக்கூட “ பசங்க காணாமல் போகும் மர்மம்” 3ம் ஆண்டில் தான் என்னால் அறிய முடிந்தது. இக்கரையும் அக்கரையும் ஒவ்வொரு மூலையில் இருந்ததாலும், மேலும் அப்பொழுது நான் வயதுக்கு !! :-) வேறு வராத காரணத்தால் நான் போவதில்லை. இப்புனித யாத்திரையில் ஊடாக என் நண்பன் விழியில் விழுந்தவளை, இதயத்தில் இருத்திக்கொண்டான்.
7 மணி போருந்துக்கு வருகிறேன், சீக்கிரம் சென்று விடும் அந்த பெண் அன்று தாமதமாக போல அந்த போருந்தில் வந்தாள். அதுநாள் வரை அவன் பார்மங்கை (சைட் என்பதை எப்படி சொல்வதாம் ?) இருக்கிறாள் என்று யான்யறியேன். தூரத்தில் தெரிந்த சிங்கத்தை காட்டுவதை போல அப்பெண்ணை காட்டி,
“நண்பா! அவள நான் பாத்துட்டிருக்கேன் டா”
மூஞ்சி தெரியவில்லை என்று முன்சென்று நன்றாக பார்த்துவிட்டு வந்து
“சொல்லிட்டியா” என்றேன்
“இன்னும் இல்லடா”
“உன் கலருக்கு ஒத்துவருமாடா” (அவன் வெள்ளையாக இருப்பான்)
“இல்லடா பார்த உடனே அவதானு ஆயிருச்சுடா”
முன் இருக்கையில் அமர்ந்து வந்த அப்பெண்ணிண் அருகிலேயே குடிகொண்டான். ½ மணி நேர பயணத்தில் அவன் அங்கே ஒன்றிபோய்விட்டான். சீட்டு கிடைத்தும் உட்காராமல் எனக்கு கொடுத்துவிட்டான். ஜன்னலோர சீட்டிற்காக நேற்றுதான் என் காலை மிதித்து சென்றான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நானும் வழக்கம் போல தூங்கிக்கொண்டு வந்தேன்...
(தொடரும்..)
திருக்குறள் இன்று..
#############################################
கணைகொடிது யாழ்கொடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலாற் கொளல்.(279)
- திருவள்ளுவர்
#############################################
விளக்கம்:
நேரானாலும் அம்பு கொடுமை செய்வது: வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது;
மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.
Explanation:
A straight arrow will only harm, but a bend lyre will bring bliss by its melodies;
So One should judge people by their actions not by One’s looks.
இது என்ன வெட்டிவேலை !!
நீ கொஞ்சிய நாய்க்குட்டியின் காதோர தழும்பு,
உன் தம்பியின் தூக்க உளறல்,
எதிர்வீட்டிலிருந்து உன்னை நோக்குபவன்
என்று நம் பேச்சு நீள்கிறது.....
‘இது என்ன வெட்டிவேலை’ என்றொரு குரல் எழ....
எதையோ கேட்க நீ சிணுங்கிய சிணுங்களுக்காக,
உன் அலைபேசியாகவும் மாற தலைப்பட்ட
என்னுள், புதைந்துப்போனது அக்குரல்......
திருக்குறள் இன்று..
########################################
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.(461)
########################################
விளக்கம்:
ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும்;
பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதியபின்னரே செய்ய வேண்டும்.
Explanation:
Before doing a vocation, One should consider entities that are initially disintegrated;
the entities that are created, and entities that are remains at the end.
P.S. Entities may be time, effort, materials and even our thought.
திருக்குறள் இன்று..
########################################
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
########################################
விளக்கம்:
தெய்வத்தின் அருளாலே கை கூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது;
தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்து விடும்.
Explanation:
Even if God's grace not able to help One. Persistence from;
his part will pay the gratitude to him.
திருக்குறள் இன்று..
########################################
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்
என்ன பயனும் இல.(1100)
########################################
விளக்கம்:
காதலுக்கு உரிய இருவருள் , ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால்;
அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.
Explanation:
If the ogle of the lovers lock each other with their passion;
There is no need to speak it in words and it is futile.
P.S.: If eyes speak, what is purpose to let out in words?
திருக்குறள் இன்று..
########################################
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள. (521)
- திருவள்ளுவர்
#########################################
விளக்கம்:
ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல்;
என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.
Explanation:
Even if One become poor, his true Relatives will show;
Same warmth and Kindness to him.
திருக்குறள் இன்று..
########################################
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.(53)
- திருவள்ளுவர்
#########################################
விளக்கம் :
மனைவி சிறந்தவளாக இருந்தால் ஒருவனுக்கு எல்லாம் கிடைத்ததாகப் பொருள்;
அதேசமயம், மனைவி சரியில்லாதவளாக இருந்தால் அவனுக்கு எந்தச் சிறப்பு கிடைத்து என்ன பயன்?
Explanation:
If one’s spouse is extraordinary in thought and behavior, he got every thing in the world;
Contrary if his spouse is worse, what the use of all other excellent things in his life?
P.S.: Wife is life, so choose Wife / Husband wisely…..
திருக்குறள் இன்று..
#############################################
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.(1082)
- திருவள்ளுவர்
##############################################
விளக்கம் :
என்னை அவள் நோக்கினாள். நான் பார்க்க, என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள். அந்தப் பார்வை;
தானே தாக்கி வருத்தும் அம்பு மட்டுமின்றி, சேனையையும் கொண்டு தாக்குவது போல் உள்ளதே.
Explanation:
She saw me, as I reciprocate to her she confers a counter glance. That glance is like;
darts from an Army, whereas a single dart is ample for me to face.
ஜோதியும் !!! சுணங்கிய அ.தி.மு.க வும் !!!
சசிகலா, மற்றும் அவர் குடும்ப ஆதிக்கம் என்ற திரியை கொழுத்தி போட்டபடி அ.தி.மு.க வை விட்டு வெளியேறிவிட்டார் வக்கில் ஜோதி..
இது ஒன்றும் புதிய செய்தி என்றாலும், அ.தி.மு.க 10 வருடங்களாக வீரியம் குறைந்து காணப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சமிபத்திய சர்சைகளான சிதம்பரம் வழிபாடு, ஆவின் பால் விலையுயர்வு, மின்சார பற்றாக்குறை போன்ற விசயங்களில் முறையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு பா.ம.க காட்டும் எதிர்ப்பில் அரையளவு கூட அ.தி.மு.க காட்டவில்லை.
எம்.பி தேர்தல் நெருங்கிவிட்டாலும், அ.தி.மு.க தன்னை தி.மு.க விற்கு தான் ஒரு சரியான மாற்று என்று சொல்ல தயங்கி நிற்கிறது. அ.தி.மு.க வின் எதிர்ப்புக் குரலாக ‘அம்மா’வின் அறிக்கை மட்டுமே முகங்காட்டி நிற்கிறது. 2ம், 3ம் கட்ட முகங்களின் குரலை கேட்க முடிவதில்லை.
இளைஞர்களின் ஓட்டுக்காக தி.மு.க வும் தே.மு.க வும் போட்டிபோட; பா.ம.க எதிர்க்கட்சியாக செயல்பட; வி. சிறுத்தைகள் போன்ற கட்சிகள் பிரிந்து விட; ம.தி.மு.க ஒதுங்கி நிற்க; அ.தி.மு.க எங்கே நிற்கிறது !!
அ.தி.மு.க தன்நிலை மாற்றி; வினையாற்றினால் தான் உருப்படமுடியும்...
திருக்குறள் இன்று..
#################################################
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. (725)
- திருவள்ளுவர்
################################################
விளக்கம்:
கோழைகளுக்கு கையில் வாள் இருந்தும் பயனில்லாதது போல;
அவையில் பேச அஞ்சுபவருக்கு பலநூல் கற்றும் பயனில்லை.
Explanation:
Like a coward having a sword;
A great amount of learnings will not help one who is afraid of assembly.
திருக்குறள் இன்று..
#############################################
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். (1106)
- திருவள்ளுவர்
#############################################
விளக்கம்:
மதிதான் அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால்;
இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்.
Explanation:
Since, my exhausted soul is revived whenever I embrace my lover;
my lady’s shoulders should be made of Elixir.
தப்பி பிழைக்குமா ஹாக்கி..
பிஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக சிலியில் நடந்த தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி தோற்றது, இதன் மூலம், கடந்த 80 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோனது.
1980துகளில் தொடங்கிய வீழச்சி முழுபரிமாணம் அடைந்து இன்று இந்தியாவிற்கு அவமானம் தேடி தந்துள்ளது. ஒரு காலத்தில், தயா சிங் ஆட்டத்தை பார்த்து, அவர் ஹாக்கி மட்டை வேதியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது போன்ற பொற்காலத்தை இழந்து இந்திய ஹாக்கி கற்காலத்தில் நிற்கிறது.
எந்த ஒரு Chak De வும் ஹாக்கியின் தரத்தை உயர்த்தவில்லை. காலங்காலமாய் வெற்றி பெற்ற இந்தியா, பாக்கிஸ்தான் அணிகள் Astro Turf என்கிற செயற்கை புல்வெளி ஆட்டம், புது யுக்திகள் போன்ற மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கவில்லை. இதன் மூலம் ஆஸ்தேர்லியா, நியுசிலாந்து, அர்ஜன்டீனா போன்ற அணிகள் முன்னிலைக்கு வந்துள்ளன. மேலும் இந்தியரசின் ஆதரவு குறைவு, கிரிக்கெட்டின் எழுச்சி போன்ற காரணங்களும் ஹாக்கிக்கு எதிராக செயல்பட்டன.
உடனே “கிரிக்கெட் தான் எல்லாவற்றுக்கும் காரணம் ” என்று கூறுவதை விடுத்து, உண்மையை யோசிக்க வேண்டும். கிரிக்கெட்டிற்கும் அரசு ஆரம்ப காலங்களில் ஆதரவு தரவில்லை, இன்று பி.சி.சி.ஐ வளங்கொளிக்கும் நிறுவனமாயிருக்கிறது. கிரிகெட்டின் வருமானத்தை ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டிற்கு சில சதவீதங்களை ஒதுக்க வழிசெய்ய வேண்டும்.
சார்ல்ஸ்வொர்த் வருகிறார் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.....
ம.தி.மு.க-வுக்கு ஆப்பு வைத்த விஜயகாந்த்..
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுத்த’ கதையா , அ.தி.மு.க சீட்டை ஒதுக்கினாலும் தே.மு.தி.க வின் வி.காந்த் ஆதரவு தர ஒத்துக்கொள்ளாததால், ம.தி.மு.க தேர்தலில் இருந்து விலகியது.
தே.மு.தி.க வும் ம.தி.மு.க வும் சென்ற தேர்தலில் மோதிக்கொண்டது ஞாபகம் இருக்கும் (சாதி ஓட்டு வேறு..). இப்போது சீட்டு என்றதும் தூது விடப்பட்டிருக்கிறது..பேரம் படியவில்லை போல, விஜயகாந்த் ஆதரவு தர மறுக்க...
ம.தி.மு.க கலங்கி நிற்க....
வை.கோ ஆட்சி மன்ற (?) கூட்டத்தை கூட்டி !! கூட்டமாக மங்களம் பாடி முடித்து வைத்தார்...விஜயகாந்த் : “தமில எனக்கு புடிக்காத ஒரே வார்த்த கூட்டணி... கூட்டணி... கூட்டணி...”
வை.கோ : “பரட்ட !! ஆதரவ கொடு !! ஆத்தா வையும்.......”
திருக்குறள் இன்று..
########################################
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். (1116)
- திருவள்ளுவர்
#########################################
விளக்கம்:
மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால்;
வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே.
Explanation:
The Stars are perplexed and started blinking, as they are;
unable to differentiate between the Moon and her face.
திருக்குறள் இன்று..
########################################
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221)
- திருவள்ளுவர்
########################################
விளக்கம்:
வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை;
பிறர்க்குத் தருவது எல்லாம் எதிர்ப் பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.
Explanation:
Charity is one, where resources should be given to the deprived;
Else if one gives to others only because of the counter benefits not for Charity.
P.S. In Charity is one there is no way to expect help back.
திருக்குறள் இன்று..
########################################
வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. (1266)
- திருவள்ளுவர்
########################################
விளக்கம்:
என் காதலன் ஒருநாள் மட்டும் என்னிடம் வருவானாக. வந்தால்;
என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு இன்பத்தை நானும் பருகுவேன்.
Explanation:
If my lover, who is estranged from me, comes back, I am desperate to;
imbibe all the pleasure with my love to end my “Malady of Severance”.
ஒத்தையில அலைய விட்ட..
ஒழுங்காதான் நான் இருந்தேன் இப்ப
ஒத்தையில அலைய விட்ட....
ஒத்தையடி பாதையிலே! மானம் சுட்டெரிக்குதம்
ஒருசமயத்திலே, மாமரநிழலுல மானபோல நின்னவ
கடந்து போக எட்டவெச்ச வேளையிலே
கண்நோரமா என்ன பார்த்த, அண்ணாச்சி
கடை கொசுறு போல. ஊருசனம்
கண்ணு வெச்ச ஆத்தா சுத்திபோடும்!
கண்ணு தெச்ச என்ன பண்ண?
கண்பேச்சு சொல்லாச்சு, சொல்லிப்புட்டேன்
காதலத்தான். காத்திருந்தேன் பதிலபாத்து
கட்டியணச்சு கட்டியம் சொல்லிபுட்ட!
கனவ என் நெஞ்சுல பத்திவிட்ட!
வெறுமானம் போல நானிருந்தேன்
வளர்பிறைய ஏத்திவெச்ச. முழுமதியா
வரமுன்னமே வேறெங்கோ வாக்கப்பட்ட
வார்த்த கெட்ட! என்ன அலையவிட்ட!
- மெய் புங்காடன்
திருக்குறள் இன்று..
Thirukkural For the Day
########################################
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. (561)
########################################
விளக்கம்:
ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாகவே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி;
குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.
Explanation:
The deed of the Judge is to investigate the crime in proper way;
and provide the punishment for the crime so that the accused will not commit it again.
திருக்குறள் இன்று..
########################################
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186)
- திருவள்ளுவர்
########################################
விளக்கம்:
விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல;
என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.
Explanation:
Like the darkness waiting for the end of the light in the lamp;
the malady of severance is waiting for the end of embrace of my lover.
திருக்குறள் இன்று..
########################################
கெடுநீரார் காமக் கலன். (605)
########################################
விளக்கம்:
சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம், என்னும் நான்கும்;
தாம் அழிந்து விடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.
Explanation:
Sluggishness, Procrastination, Forgetfulness and Slumber are the four Ships;
which the people, who want to destroy themselves will ride.
திருக்குறள் இன்று..
########################################
பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. (1083)
########################################
விளக்கம்:
"கூற்று" என்பதை இதன்முன்னர் அறியேன், இப்போது அறிந்து விட்டேன். அது;
அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.
Explanation:
I don’t know how “Death” will look like. But now I fully understand that;
It comes in the form of beautiful lass with immense eyes.
சிற்றம்பல மேடையில் தமிழ் (ஏற்றம் !!) இறக்கம் !!
சிற்றம்பல மேடையில் தமிழ் ஏற்றம் !! இறக்கம் !!
சட்டம் போட்டாயிற்று !!
ஆணையர் ஆணையும் உண்டு !!
இருந்தும் ......
தேவாரம் பாடி தமிழை சிற்றம்பலத்தில் ஏற்றி விட வந்த ஆ.சாமி அடிப்பட்டு வந்திருக்கிறார்.
அரசு கணக்குக்காட்டிருக்கிறது, தமிழ் பாடப்பட்டதென்று !!
கடவுளை பார்க்கமுடியாமல், தடுத்து நின்ற தீட்சிதர்களை பார்த்து தமிழ் பாடப்பட்டது !!
இந்தகூத்துக்கள் ஒருபுறமிருக்க, எல்லோரும் சென்றபின் என்ன நடந்திருக்கும் ?
தமிழ் பாடப்பெற்ற இடமெல்லாம் தண்ணீரும் பாலுமாய் கழுவி தீட்டு கழிக்கப்பட்டிருக்கும்.
“நீச பாக்ஷை” கேட்டுவிட்ட (?) (தீட்சிதர்களுடைய கூச்சலை மீறி) கடவுளுருவுக்கு சந்தனம், இளநீர், பால் கொண்டு பாவம் போக்கப்பட்டிருக்கும்.
தமிழுக்கு ஒரு அவமாணம் !!
தமிழின துரோகிகளை பூண்டோடு ஒழிக்கவேண்டும் !!
அந்த கூட்டத்தின் வால் நறுக்கப்பட வேண்டும் !!
என்று கன்னம் துடிக்க உணர்ச்சிவசப்படுவதை விட……..
யோசிக்கணும்…..
உணர்ச்சிவசப்பட்டு, ஒரு மொழியை எதிர்த்து வேற மொழி வந்தது போல ஆக கூடாது.
தமிழிலே பாடறது சட்டபூர்வமாகனும், சட்டத்தை எதிர்த்தா என்ன ஆகும்முனு தெரியவெக்கனும்!
‘இருக்கறவன் தர மாட்டான்
பசிச்சவன் விட மாட்டான்’ கிற கதையாகனும்.
கடவுளை நம்பரமோ! இல்லையோ! தமிழுக்கான உரிமையை பெற துணை செய்யனும்!
இந்த உலகம் மாயைனு சொல்றவுங்க, இந்த அற்க உடலோடு அழிஞ்சு போற (தேவ) மொழியை பத்தி ஏன் இவ்வளவு கவல படனும்?
நந்தனார் மோட்சம் (?) ரொம்ப ரொம்ப பழைய கதை! (எல்லாருக்கும் அது கதையினு தெரியும்). பொற்காலத்த பரண் மேல போட்டுட்டு நிகழ்காலத்துக்கு வாங்க!!
திருக்குறள் இன்று…
########################################
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். (949)
- திருவள்ளுவர்
#########################################
விளக்கம்:
மருத்துவத்தைக் கற்றறிந்தவன்,
• நோயாளியின் சக்தியையும்,
• நோயின் தன்மையையும்,
• காலத்தின் இயல்பையும்,
நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.
Explanation:
A good Physician should look,
• Patient’s strength
• Character of the Disease
• Time frame
and research about it before giving treatment.
தேடல்...
நான் வாழ்க்கையை தேடுகிறேன்!
நதியில், வனத்தில், மக்களிடம்
நான் வாழ்க்கையை தேடுகிறேன்!
கனவு வெளியில் மிதந்துகொண்டே
ஆனால்..
அது மெதுவாக தேய்கிறது, காட்டில்
தொலைந்த ஒத்தையடி பாதைபோல
ஆசை என்னும் சக்கரம் கட்டி
ஓட்டமாய் ஓடுகிறேன், தூரபச்சை
பார்த்துக்கொண்டே சுற்றம் தெரியா
குருடனாய் ஓடுகிறேன்!
பௌர்ணமியின் நினைவிலேயே,
மூன்றாம் பிறையை மறந்துநிற்கிறேன்
ஓட்டத்தை நிறுத்திவைத்த அந்த ஊர்புரத்தின்
ஓங்கிய புளியமரத்தின்........... புத்தனானேன்கண் திறந்துவிட்டது....
மாளிகை கனவை சுவரோரமாய் சாய்த்துவைத்து
ஓரரைசன்னலில் மழைரசிக்க பழகுகிறேன்,
கடல்தான் கனவென்றாலும், ஓடியவழியெல்லாம்
கரை சிறந்த பாய்கின்ற நதியாக
திருக்குறள் இன்று…
########################################
இரவாமை கோடி யுறும். (1061)
########################################
விளக்கம்:
தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண் போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல்;
வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.
Explanation:
It would be better if you tolerate the deprivation, than to plead to the one who;
bestows, without concealing all the wealth with bliss.
P.S. He is like “Eye”; one should stand with dignity and not fall to plead.