நண்பனின் காதலி..

நான் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. சென்னையில் ஒரு நண்பனின் திருமணத்தில் அவர்களை சந்தித்தேன். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும், வேறு துறை என்பதாலும், மேலும் நான் ஒரு ஹீரோ !! இல்லை என்பதாலும், என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது ஆரம்பித்தது கல்லூரியின் கடைசி ஆண்டுகளில். நானும் என் நண்பனும் ஒரே ப்ராஜக்ட் (தமிழில்?), 7 மணிவரை வேலை பார்த்துவிட்டு பேருந்தில் செல்வது வழக்கம்.

பொதுவாக பெண்கள் இல்லாமல் வறண்டு கிடக்கும் இயந்திரவியல் பறவைகள், பசுமையை தேடி EEE மற்றும் E & I போன்ற துறைகளை தினமும் நாடுவதுண்டு. இதைக்கூட “ பசங்க காணாமல் போகும் மர்மம்” 3ம் ஆண்டில் தான் என்னால் அறிய முடிந்தது. இக்கரையும் அக்கரையும் ஒவ்வொரு மூலையில் இருந்ததாலும், மேலும் அப்பொழுது நான் வயதுக்கு !! :-) வேறு வராத காரணத்தால் நான் போவதில்லை. இப்புனித யாத்திரையில் ஊடாக என் நண்பன் விழியில் விழுந்தவளை, இதயத்தில் இருத்திக்கொண்டான்.

7 மணி போருந்துக்கு வருகிறேன், சீக்கிரம் சென்று விடும் அந்த பெண் அன்று தாமதமாக போல அந்த போருந்தில் வந்தாள். அதுநாள் வரை அவன் பார்மங்கை (சைட் என்பதை எப்படி சொல்வதாம் ?) இருக்கிறாள் என்று யான்யறியேன். தூரத்தில் தெரிந்த சிங்கத்தை காட்டுவதை போல அப்பெண்ணை காட்டி,
“நண்பா! அவள நான் பாத்துட்டிருக்கேன் டா”

மூஞ்சி தெரியவில்லை என்று முன்சென்று நன்றாக பார்த்துவிட்டு வந்து
“சொல்லிட்டியா” என்றேன்
“இன்னும் இல்லடா”
“உன் கலருக்கு ஒத்துவருமாடா” (அவன் வெள்ளையாக இருப்பான்)
“இல்லடா பார்த உடனே அவதானு ஆயிருச்சுடா”

முன் இருக்கையில் அமர்ந்து வந்த அப்பெண்ணிண் அருகிலேயே குடிகொண்டான். ½ மணி நேர பயணத்தில் அவன் அங்கே ஒன்றிபோய்விட்டான். சீட்டு கிடைத்தும் உட்காராமல் எனக்கு கொடுத்துவிட்டான். ஜன்னலோர சீட்டிற்காக நேற்றுதான் என் காலை மிதித்து சென்றான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நானும் வழக்கம் போல தூங்கிக்கொண்டு வந்தேன்...
(தொடரும்..)

2 மறுமொழிகள்:

யாத்ரீகன் said...

>>> பார்மங்கை <<<

எப்படிஈஈஈஈ ?!?!?!?! ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?!?!

மெய் புங்காடன் said...

wiktionaryல போடறத பத்தி என்ன நினைக்கறீங்க.. :)