ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுத்த’ கதையா , அ.தி.மு.க சீட்டை ஒதுக்கினாலும் தே.மு.தி.க வின் வி.காந்த் ஆதரவு தர ஒத்துக்கொள்ளாததால், ம.தி.மு.க தேர்தலில் இருந்து விலகியது.
தே.மு.தி.க வும் ம.தி.மு.க வும் சென்ற தேர்தலில் மோதிக்கொண்டது ஞாபகம் இருக்கும் (சாதி ஓட்டு வேறு..). இப்போது சீட்டு என்றதும் தூது விடப்பட்டிருக்கிறது..பேரம் படியவில்லை போல, விஜயகாந்த் ஆதரவு தர மறுக்க...
ம.தி.மு.க கலங்கி நிற்க....
வை.கோ ஆட்சி மன்ற (?) கூட்டத்தை கூட்டி !! கூட்டமாக மங்களம் பாடி முடித்து வைத்தார்...விஜயகாந்த் : “தமில எனக்கு புடிக்காத ஒரே வார்த்த கூட்டணி... கூட்டணி... கூட்டணி...”
வை.கோ : “பரட்ட !! ஆதரவ கொடு !! ஆத்தா வையும்.......”
ம.தி.மு.க-வுக்கு ஆப்பு வைத்த விஜயகாந்த்..
வகை:
சேதி
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
கூட்டணிகளின் உதயமும் அழிவும் தெரிகின்றன்!
கோடிகள்,சாயக் கேடிகளுடன் சேர்ந்து
ஓய்ந்துவிட்ட புயல் ஒரு பக்கம்,
மதவாதத்திற்கு எதிரானவர்கள் ஓரணி,
இரண்டுக்கும் நடுவே கருப்புப் புரட்சி
வரிகட்டாமல் ஏமாற்றுபவர்கள் நேர்மை பற்றிப் பேசுவதும்,சுரர் அசுரர்
போராட்டம் என்று வீரமிக்க முந்தானை
அறிக்கைகள் விடுபவரும் மற்ற அணியை உடைப்பதிலே நரிகளின்
உதவியுடன் எல்லாம் செய்து பார்ப்பார்கள்.ஏமாறாமல் இருக்க வேண்டியது மத வாத எதிர்க் கூட்டணி மட்டுமல்ல,மக்களுந்தான்.
Post a Comment