திருக்குறள் இன்று..

#########################################
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
எற்றென்னை உற்ற துயர். (1256)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்
:
வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலேயே இருப்பதனால், என்னை அடைந்த இக்காமநோயானது எத்தன்மை உடையதோ.

Explanation:
The “Love disease” is a one which gives symptom like;
fondness of going behind the loathing lover.

திருக்குறள் இன்று..

########################################
நயன்ஈன்று நன்றிபயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (97)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
பபிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒருசிறிதும் விலகாத சொற்கள்;
சொல்பவனுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்.

Explanation:
Words which are useful to people, and don’t deviate from good will;
Will definitely add goodness and value to the articulator.

10/10 இஸ்ரோவின் உலக சாதனை..

உலகிலேயே முதல் முறையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) இன்று சாதனை படைத்தது.

ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக பிரியத் தொடங்கிவிட்டன. முதலில் கார்டோசாட், ஐஎம்எஸ் ஆகிய செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணி்ல் ரிலீஸ் செய்தது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 8 நானே செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தியது.

இப்போது இந்த செயற்கைக் கோள்களை அதனதன் வட்டப் பாதைக்குக் கொண்டு செல்லும் பணியில் இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில், 10 செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிடப்பட்டது.

அதன்படி கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என்று 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.

8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையது. இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது. 8 நானோ செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ.

இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது. இதில் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் ஹைபர்ஸ்பெக்டரல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு கடந்த 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

சனிக்கிழமை கவுன்ட்டவுன் தொடங்கியது. இன்று காலை 9.23 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இதையடுத்து வரிசையாக 10 சாட்டிலைட்களையும் புவி வட்டப் பாதையில் பி.எஸ்.எல்.வி. வரிசையாக ஏவியது.

இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும். உலக அளவில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு ரஷ்யா அதிகபட்சமாக 8 செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது. ஏரியான் 7 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றுள்ளது. அமெரிக்கா ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4 செயற்கைக் கோள்களை மட்டுமே அனுப்புவது வழக்கம்.

உலக சாதனை:

இந்த வகையில் இஸ்ரோ உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

ராக்கெட் செலுத்தப்பட்டதும் முதலில் கார்ட்டோஸாட்-2ஏ விண்ணில் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு செயற்கைக் கோளாக நிலை நிறுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 100 விநாடிகள் பிடிக்குமாம். அதாவது 1000 விநாடிகளுக்குள் 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

திருக்குறள் இன்று..

##################################################
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். (1148)
- திருவள்ளுவர்
##################################################

விளக்கம்:
பழிச்சொல்லால் காதலைத் தணித்துவிடுவோம் என்று முயலுதல் நெய்யால் நெருப்பை அவிப்போம்;
என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.

Explanation:
If one thinks that of quenching the sense of Love by rebuke, it’s a mindless job;
Like one trying to smother the fire by using the oil.

திருக்குறள் இன்று..

#########################################
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள. (527)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும், அத்தகைய இயல்பினருக்கே சுற்றப்பெருக்கமும் உண்டாகும்.

Explanation:
Crow as soon as it notice food, will call its species instead of taking for itself;
People of such nature will be always be awarded by adjoining and brimming folks.

திருக்குறள் இன்று..

#########################################
காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (1163)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காதலும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.

Explanation:
My soul suffering from malady of Separation, is like a Weigh scale;
which wag between weights of love and timidity

திருக்குறள் இன்று..

#########################################
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
தெய்வத்தின் அருளாலே கை கூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்து விடும்.

Explanation:
Even one doesn’t have the God’s grace, one’s hard work;
will pay for his perseverance.

திருக்குறள் இன்று..

#########################################
கண்டாங் கலுழ்வ தென்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யான்கண் டது. (1171)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம் :
இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காதல்நோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று அவரை என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?

Explanation :
I got the love fever because of these eyes, which had shown me my lover;
But still I can’t understand, why they are now crying for a glimpse of my lover?

திருக்குறள் இன்று..

#########################################
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்:
முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்.

Explanation:
Aniccham is a flower which will get slump as one smell it (So Soft..). Like that;
Guest heart will wilt on seeing one’s displeasure in the face.

திருக்குறள் இன்று..

########################################
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணெ. (1134)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளெக் காதல்நோய் என்கின்ற கடுமையான;
வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே, என்ன செய்வேன்.

Explanation:
The floods of the love is dragging away the boats of;
shyness and gentleman manners. What can I do?.

திருக்குறள் இன்று..

########################################
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.(565)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
எளிதாகக் காணமுடியாத தன்மையும், கமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம்;
பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.

Explanation:
One’s wealth, whom people cannot easily see him and if seen show his face with discontent, is like;
Wealth protected and utilized by a Ghost.

திருக்குறள் இன்று..

########################################
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.(78)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது;
வன்மையான பாலை நிலத்திலே காய்ந்தமரம் தளிர்த்தாற்போல் நிலையற்றதாம்.

Explanation:
Life of One who doesn’t have love in his heart, is equivalent to;
the sprouting of the tree in the tough desert, which is very momentary.

திருக்குறள் இன்று..

########################################
யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு. (1140)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான்;
அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.


Explanation:
They don’t experience the malady of severance, consequently;
like fools, they laugh at me without any consideration.

நிறத்தை கூறி மனைவியை திட்டினால் குற்றம்

மனைவி கருப்பாக இருப்பதாக கூறி திட்டினால் அது குற்றச் செயல் என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவர் 1999ம் ஆண்டு பாத்திமா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தனது மனைவி கருப்பாக இருப்பதைக் கூறி திட்டி வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த பாத்திமா, இரண்டே மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார்.

மரணமடைவதற்கு முன்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தனது நிறத்தைக் கூறி கணவர் திட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து மதுரை செஷன்ஸ் நீதிமன்றம், மனைவியை தற்கொலை செய்யத் தூண்டியதாக கூறி பரூக் பாட்சாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து பரூக் பாட்சா சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஒரு பெண்ணின் நிறத்தையோ, அழகையோ அவமானப்படுத்தும் வகையில், கருத்துக்கள் தெரிவிப்பது, உடல் ரீதியாக செய்யும் துன்புறுத்தலை விட மோசமானது, கொடுமையானது. பெண்ணுக்கு அது மிகுந்த துன்புறுத்தலைத் தரும்.குற்றவாளியின் மனைவியை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மன ரீதியில் கொடுமைப்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பு தேசிய அளவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

திருக்குறள் இன்று..

########################################
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.(685)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம் :
விரிக்காமல் தொகுத்து சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு;
சுவைப்படச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பனே தூதன்.

Explanation:
A representative of a leader should
- Speak Short
- Remove depressing words
- Speak Sweet
- Ultimately bring vantage to the Company he belongs.

P.S. Though the Kural couplet speak about a King and his Messenger. It holds well in the Globalised Environment.

50வது இடுகை – சில நன்றி நவில்தல்..

பல ஜாம்பவான்கள் கலக்கிவரும் பதிவுலகில், சின்னப்பையனாகிய நான் 50தவது இடுகை தாண்டியதற்கு ஒரு பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான், என்ன மன்னிச்சிருங்க !! ஏதோ கொஞ்சம் எழுத ஆரம்பதித்தற்கு காரணமானவர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்கு இந்த இடுகை தேவை.

இனி என் நன்றி பட்டியல்.....
முதலாக வள்ளுவருக்குதான் நன்றி சொல்லனும், எனக்கு வந்த எல்ல மின்னஞ்சல்களை வரிந்துகட்டி முன்னனுப்புதல் (Forward) செய்துவந்த வேளையில், மின் அஞ்சலில் வந்தது திருக்குறளும் அதன் ஆங்கில விளக்கமும். ஆங்கில விளக்கத்தை தலைக்கிழாக படித்தும் ஒன்றும் புரியவில்லை!! இது வேலையாகாது.... என்று, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கம் தந்து, முன்னனுப்புதல் செய்ய ஆரம்பித்தேன். “உருப்படியா ஒரு வேல பண்ற” என்று விமர்சனம் வர !!, பல நண்பர்கள் தங்களுக்கும் முன்னனுப்புதல் செய்ய வேண்ட !!, தமிழ் தெரியாதவர்களும் ஆங்கில விளக்கத்தை வைத்து பாராட்ட !! இன்று வலைப்பதிவு வரை வர வைத்தது.

இரண்டாவதாக அருட்பெருங்கோ, கஷ்டப்படுத்தி தமிழ் எழுதி தமிழ் 99 உபயோகிக்க கற்றுகொடுத்து, பதிவுலகை அறிமுகப்படுத்தி, வலைப்பதிவை உருவாக்க உதவி செய்து; என்னை கைப்பிடித்து பதிவுலகிற்கு அழைத்து வந்தவர். மேலும் கவுஜை, குப்பி போன்ற பல முக்கிய :-) பதிவுலக சொற்களை அறிமுகப்படுத்தியவர்...
மூன்றாவதாக பதிவுலகில் விளையாடி வரும் பல பதிவர்களின் படைப்புக்கள் அதனால் எழுந்த ஆர்வம், சிலரை மொழிகிறேன்...

தமிழ்மண இணைப்பு மற்றும் தொழில்நுட்பம் பற்றி வசந்தம் ரவி, எக்காள பதிவர் TBCD, நையாண்டி லக்கிலுக்(இவரை போல நக்கல எழுதனும்...), 4 பக்கதுக்கு குறையாமல் எழுதும் உண்மை தமிழன்(‘கொடுமுடியில் ஒரு அனுபவம்’... என்னையும் என் நண்பர்களையும் வேறு உலகத்திற்கு கூட்டிச்சென்றது), வாழ்க்கை கதை கூறும் இம்சையரசி, சகப்பதிவர் வீரசுந்தர், சினி பாடல்கள் தரும் தேன்கிண்ணம், தொழில்நுட்ப பி.கே.பி, டோண்டு சார், சேதி கூறும் இட்லி வடை, தமிழ் 2000, ச்சின்னப்பையன், தமிழ் சசி, வவ்வால், பாஸ்டன் பாலா, வால் பையன் இன்னும் பலர். பெயர் விடுப்பட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்..

என்னை ஒரு பதிவராக ஏற்றுக்கொண்டு, பதிவுகளைப் படித்து ஊக்கப்படுத்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றி.....

திருக்குறள் இன்று..

########################################
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.(212)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம் :
தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம்;
"தக்கரவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.


Explanation :
If one earns wealth by effort, that wealth’s purpose is to be;
utilized for the suitable people who are deprived.

என் மூன்று தவறுகள் - சந்திரிகா குமாரதுங்கா

சந்திரிகா குமாரதுங்கா 9 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அரசியல் வாழ்க்கையில் தான் செய்த 3 குற்றங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றை பட்டியலிட்டும் கூறியுள்ளார்.

1. புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை 2004ம் ஆண்டு கலைத்தது.

2. சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைத்தது.

3. காலம் வரும்போது தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் தவறு காரணமாக அமைதிக்கான ஒரு நூலிலை வாய்ப்பும் பறிபோனது.. ரணிலும் சிங்கள அரசியல் தலைவராக நடந்தாலும். அமைதியை நோக்கி ஒரிரண்டு அடிகள் அவர் நடந்தார், என்பது சந்தேகமில்லை.

அரசியல் வெளிச்சத்தில் இல்லாத சந்திரிகாவும், நடுமேடைக்கு வரும் ஒரு முயற்சியாகவே இதை கூறுகிறார். இதில் கடைசியில் நசுக்கப்படுவது இலங்கை மக்களே!! எங்கே அமைதியோ.. அங்கே வளர்ச்சி..

திருக்குறள் இன்று..

########################################
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.(361)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து;
"அவா" என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்.


Explanation:
Every life and every time, the only thing that;
gives the sorrow of Birth is one’s desire.

P.S. As per Theory every life should take 7 births before attaining salvation. If you believe such things or not the essences hold good everywhere.