திருக்குறள் இன்று..

#########################################
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்பாண் புனைபாவை அற்று. (407)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே.

Explanation:
One who doesn’t acquire the fine and good knowledge, even if he is fair;
is like a good hansom toy made of earthen material.

குறுந்தொகை இன்று..

சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
     கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
     வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.
                        - சத்திநாதனார்.

விளக்கம்
:
காட்டில் இருக்கும் கோடுடைய சிறு பாம்பை பார்த்து, சலனப்படும் யானை போல;
அரிசி பல், வளையல் கை கொண்டு வந்த இளையவளை பார்த்து மனம் மயங்குகிறது.

Explanation:
As a little white snake with lovely strips on its young body bring dilemma to the jungle elephant, this girl with her teeth like sprouts of new rice and with her wrists stacked with bangles troubles me.

Poet: Satthi Nathanar
Poem: Kurun-thogai

திருக்குறள் இன்று..

#########################################
வினைக்கண் வினையுடையான் கேன்மை வேறாக
நினைப்பான் நீங்கும் திரு. (519)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்
:
எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனைவிட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்.

Explanation:
One who ever don’t appreciate the friendship of the hardworking friend;
will have his wealth leave him.

P.S. Whoever don’t respect hard work will have same attitude to his business also.

திருக்குறள் இன்று..

#########################################
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து. (194)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையையும் தராததோடு உள்ள நன்மையையும் போக்கிவிடும்.

Explanation:
Articulating useless and uncivilized words, which apart from doing no good ;
will also spoil whatever good left behind.

திருக்குறள் இன்று..

#########################################
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். (1233)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
காதலரோடு கூடியிருந்த நாள்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவை போல் உள்ளனவே.

Explanation:
My shoulder, which are good till my lover is with me;
is becoming lean and reveal my “Malady of Separation” to the world.

சங்க இலக்கியம் இன்று..

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
   உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
   இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதுர்த்தும்
   மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே!
                   - பிசிராந்தையார்

விளக்கம்
:
"எலாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருந்து பயனில்லை! பலரோடு விருந்துண்டு உறவாடுதலில் பயனில்லை! வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவை தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை இல்லாதவர்க்கு வாழ்நாள் பயனற்றது,வீடு பேறும் இல்லையாம்". பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.

Explanation:
It is not enough; even he has all the Wealth and is a great Business magnet. His life is useless if there is no infant in his home, who will roam around spreading his little hands; to catch, to bite, and to spoil the order; and will throw the food on the floor; thus giving us coziness by performing small mischief;

P.S. This is poem is sung by Pisir-anthai-yaar at the court of Pandian King Ari-vudai Nambi. In the Sangam age (2400 years ago)

திருக்குறள் இன்று..

#########################################
அனிச்சப்பூக் கால்களெயால் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. (1115)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்
:
தன் இடையின் நுண்மையை நினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களையாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே;
இவளின் முறிந்துவிடும் இடைக்கு இனி பறைகள் சோகமாய் ஒலிக்கும்.

Explanation
:
She wears without any thought, the Anicham flower without removing the stalk;
now the drums will blare with sadness for her broken waist (because of the extra weight).

P.S. Anicham flower itself is very light, and the girl’s hip is so delicate that it will not able to carry the extra weight of the stem coming along with the flower. The hips will break, Wow!! What an imagination!!

விளக்கம் இன்று | மடலேறுதல்

ஒரு ஆண், ஒரு பெண் மீது உள்ள காதலை பலமுறை வெளிப்படுத்தியும், அந்தப் பெண் அவனை ஏறிட்டும் நோக்காததால், அந்த ஆண் காதலை வெளிப்படையாகச் சொல்லுமாறு உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, கிழிந்த ஆடையை உடுத்தி, பனைக்கருக்கு ஒன்றை குதிரை வடிவத்தில் செய்து, அதன் மீது ஏறிக்கொண்டு தன் நண்பர்கள் மூலம் அதைத் தெருவில் இழுத்து வரச் செய்து, ஓலையின் கீறல்களால் உடலெங்கும் காயமாகி, தெருவில் செல்கையில் அந்தப் பெண்ணை, ஊரார் காதுபட சத்தமாக ஏசி, அவள் மானத்தை வாங்கி, அதைப் பொறுக்காமலாவது அப்பெண் தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதிக்கலாம் என்ற கொள்கையோடு நடந்துகொள்வதுதான் மடலேறுதல் அல்லது மடலூர்தல். அப்படியும் காதலி இசையவில்லையெனில் அடுத்த நாள் மலையேறிக் குதித்து உயிர் துறப்பான்.

Madal Eruthal, is the “Palm leaf ride” explained in the old Tamil poems. A man is in love with a girl and his proposal is rejected by her. Then he decides to say his love to the society, by procession called “Palm leaf Ride”. There he will apply ashes to his body; wear torn clothes and will take a palm branch and sit down on it. And the procession starts with the friends pulling the palm branch in her lover’s street. The procession will cause injuries by the Palm leaves, still the procession proceeds, thereby indirectly announcing to the society. This is the extreme step to take, by bringing bad name to the girl, he hope the girl will accept because of his affliction. Even then girl is not accepting his love; he will commit suicide from the rock top.

திருக்குறள் இன்று..

#########################################
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக;
வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.

Explanation:
When there is no food for ears, then only;
think about the food for your body.

P.S. Food of thought is more vital then food we take.

காப்பி குடிச்சிருப்போம்.. இது காப்பி அடிக்கறத பத்தி..

நாங்கெல்லாம் காப்பியடிசிருக்கறோம்!! ஆங்கிலமுனா is was மாத்திப்போட்டு, கணக்குனா x அ y யாகவும்; y யை z டாகவும் மாத்திப்போட்டு ஒழுங்கா எழுதரவனை கடுப்பேத்தி நல்ல மதிப்பெண்ணையும் வாங்கி வக்கனையா சிரிச்சிருக்கோம்...

ஆனா, அது அதுக்கு ஒரு முறையிருக்கு.....

காப்பியடிச்சேனு தெரியாத அளவுக்கு காப்பியடிக்கனும்!! இயற்பியல், வேதியல கதய படிச்சிட்டு நம்ம நடையில எழுதனும், சமன்பாடு – முறைப்பாடுங்கற வெங்காயமெல்லாம் அப்படியே எழுத வேண்டியதுதான்.
கணக்கும் இரண்டு வரி கூட குறைய எழுத வேண்டியதுதான். வரலாறுனா நாளு, பேரு தவிற பிற எல்லாத்தையும் நம்ம எழுதிக்கலாம். விலங்கியல், தாவரவியல் னா படம் முக்கியம், பிற எல்லாம் நம்ம வசதிய பொருத்து. மொழி பாடத்துல கவிதை, இலக்கணம் முக்கியம்.


இதுக்கிடையில ஜெ! சொல்லற மாதிரி ஒரு குட்டி கத!!

ஒரு ஊருல, ஒரு ஈ இருந்துச்சாம் அதோட தோஸ்து செத்து போச்சு, சோகம் தாங்காம டெட் பாடிய சுத்தி சுத்தி வந்துச்சு. அது ஒரு விபத்து, தாள் திருப்பும் போது நண்பன் தாளுக்கிடையில மாட்டிக்கிட்டான். ரமேசுங்கர மனுசன பய (முள்ளம்பன்னினு கூப்புடுவாங்கன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்) எழுத கைய தாள் மேல வெச்சான், நன்பன் சட்னி ஆயிட்டான். சோகத்தில இருக்கற இரண்டாம் ஈ ய... ரமேச காப்பியடிச்சி எழுதர மக்கி பய புடுச்சு மொத ஈ செத்த மாதிரி தாளுல வெச்சு பத்தரம் பண்ணிட்டான்.

அந்த ஈங்க செத்தாலும் அதோட பேரு நிலச்சிருக்கும், அதாங்க நாம சொல்லுவமில்ல ‘ஈயடிச்சாங் காப்பி’.


இந்த பதிவ எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் ‘சந்தோஷ் சுப்பரமணியம்’ படம் பாத்த்துதான்..
ஏமண்டி பூமில இருந்த்தால ஒரிஜனல் ‘பொம்மரில்லு’ பாத்திருக்கேன்.. ‘ஈயடிச்சாங் காப்பி’யா இருக்கும் ‘சந்தோஷ் சுப்பரமணியம்’ பாத்திட்டுதான் இந்த பதிவு. படம் வைச்சு நல்லா தெரியுனுமுனா, இங்க போங்க….

குறுந்தொகை இன்று..

இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
  நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
  கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
  பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே.

                              -வெள்ளிவீதியார்

விளக்கம்:
  பாறையின் மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் சூரியனின் கதிர்களால் உருக ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருப்பவன் கை இல்லாதவன் அத்துடன் ஊமையும் கூட;
  கைகள் இருந்திருந்தால் வேறிடத்தில் வைத்திருக்கலாம். வாய்இருந்தாலாவது யாரையாவது அழைத்துப் பாதுகாக்கலாம்.
  அதுபோல இக்காதல் நோயை அடக்கிப் பாதுகாக்கவும் இயலவில்லை. பிறரிடம் வெளியிடுவதற்குரிய மனத் திண்மையும் இல்லை.

Explanation:
  A piece of butter is placed on the rock. But due to the hot Sun the butter started melting. A man noticing the melting is dumb and has no hands.
  If he has hands he would have placed butter somewhere; if he is articulative he would have asked for some assistance. (What a pity!!)
  As such, I am neither able to control the “Love Malady”; nor able to disclose that to the world.

P.S.
வெள்ளிவீதியார் ஒரு சங்கப் பெண்பால் கவிஞர்...
Velliveethiar (Author) is a female poet of Sangam Period (2040 years back).

திருக்குறள் இன்று..

#########################################
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
செய்யத் தகுந்தது அல்லாத ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்.
செய்யத்தகுந்த செயலைச் செய்யாமையாலும் கெடும்.

Explanation:
The being will be spoiled, by doing something that is not appropriate and also;
by not doing the appropriate things.

திருக்குறள் இன்று..

#########################################
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை. (1151)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
ஓ, சேதி கூறுபவனே!! பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக;
பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.

Explanation:
O messenger, if the news is about “my lover not departing” then you can say to me;
if the news is “lover, returning back soon”, say it to the one who will survive till then.

திருக்குறள் இன்று..

#########################################
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (435)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
குற்றம் வரும் முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது,நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.

Explanation:
Life of the one, who doesn’t protect him from making faults;
is like a hay stack kept near the fire.

திருக்குறள் இன்று..

#########################################
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. (1092)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
என்னை அறியாமல் என்மேல் நோக்குகின்ற இவள் அறுகிய நோக்கமானது , காதல் உறவிலே;
சரிபாகம் ஆவதன்று , அதனிலும் மிகுதியானது ஆகும்.

Explanation:
Her small perceive on me, without my knowledge is worth;
more than half the portion of our love affair.

திருக்குறள் இன்று..

#########################################
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (281)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன் எத்தகைய பொருளையும்;
களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.

Explanation:
If one wants to lead a life without being reproach by others, he must;
protect his mind from the thoughts of stealing.

P.S. The thought determine the attitude in your life.

திருக்குறள் இன்று..

#########################################
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியருப்பக் காய்கவர்ந் தற்று. (100)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
இனிய சொற்கள் இருக்கின்றபோது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல்;
இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே.

Explanation:
If one speaks displeasing lexis, even after having engaging words, is like;
having unripe fruit instead of ripe, sweet fruit.

திருக்குறள் இன்று..

#########################################
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றா
காமநோய் செய்தஎன் கண். (1175)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
அன்று யான் கடலிலும் பெரிதான காதல் நோயை அன்று எனக்குச் செய்த இக்கண்கள்,

அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.


Explanation:

These are the eyes which conferred me the Love malady, hence for such a crime;
they are distressed along with me by not resting.

திருக்குறள் இன்று..

#########################################
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. (1210)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
நிலவே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலரை
என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும்வானத்தில் மறையாமல் இருப்பாயாக.

Explanation
:
Oh Moon! My lover, who is nearby in the dreams, had left me.
You should prevail in the sky high and clear so that I can seek him.

P.S. Moon is symbolism for love. And even every lover-alone will share the pangs of separation with moon.

திருக்குறள் இன்று..

########################################
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண். (421)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்;
பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்.


Explanation:
The Knowledge is a device, which will take care the One till the end; It is like a fort, which foes cannot destroy, unlike any other physical things.

திருக்குறள் இன்று..

########################################
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. (1320)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், நீர் எவரையோ மனத்திற்கொண்டு;
எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ என்றுகேட்டுச் சினம் கொள்வாள்.


Explanation:
Even if see her with awe, she will get fury saying that;
“you are comparing me with another one”.

P.S. Even after getting a lover you have many things lying for the future or it may be a just another reason for petite fracas.

திருக்குறள் இன்று..

#########################################
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். (607)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து; பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்.

Explanation:
One who adore indolence, and fails to take good effort will;
attain the condition of being scolded by others.