முதல் பாகம் படிக்க.. நண்பனின் காதலி..
வாழக்கை வழக்கம் போல ஒடிக்கொண்டிருக்க, பின்புல வேலைகள் நடந்து கொண்டிருந்த்து. அப்பெண்ணிண் வீட்டையும் கண்டுபிடித்துவிட்டான் நட்பு, என் கஷ்ட காலம் என் வீட்டிலிருந்து மூன்றாவது தெரு தாண்டிப்போனால் அவள் வீடு.....
ஒரு ஞாயிற்றுகிழமை, அப்போது வேறு டி.வி.எஸ் 50 பழகிய நேரம் தனியாக ஓட்டுவேன், டபுள்ஸ் என்பது கஷ்டம் தான். அவனை ஏற்றிக்கொண்டு, தெருக்களில் தெரு நாய்களையும், சில தாத்தாக்களையும் திகிலடித்துவிட்டு, ரோட்டை அளந்து ஒரு வழியாக அவள் வசிக்கும் தெருவிற்கு வந்து சேர்ந்தோம். ஒரு மூன்று முறை வீட்டை சுற்றியும் அவள் கண்ணுக்கு அகப்படவில்லை. என்ன விடாகண்டனுக்கு வந்த சோதனை என்று கவலையோடு யோசிக்கவும், “துணையில்லாதவருக்கு தெய்வமே துணை” என …..
பிள்ளையார் கோயிலுக்கு பஜனை பாட போய்விட்டோம்….
மீண்டும் சென்று ஒரு மூன்று சுற்று,........ ம்ஹம் !! வேலையாகவில்லை.
கடவுளே !! என்ன ஒரு சோதனை ....
கடைசி.. கடைசியாக... இன்னும் ஒரு மூன்று முறை. சரி என்று ஆரம்பித்தால்...
பிள்ளையார் அருளோ !! யதோசையாகவோ !! அவள் எங்கேயோ வெளியில் சென்று கொண்டிருந்தாள். ஹீரோவின் நண்பன் என்ற முறையில் டி.வி.எஸ் யை அவன் கையில் கொடுத்து அவள் முன் சென்று ஒரு ஒடி ஒடித்து படங்காட்ட கிளப்பிவிட்டேன்...
மிகவும் வெயிட்டாக வண்டியை கிளப்பி வேகமாக சென்றான்......
அந்தோ பரிதாபம் வண்டி அவளை கடக்கும் முன்னே நின்று போய்விட்டது, அவள் பறந்து போய் விட்டாள். இன்னும் வண்டியை கிளப்ப போராடிக் கொண்டிருந்தான் நண்பன்.
கல்லூரியின் கடைசிக்கட்டத்திலும் அவனாய் போய் சொல்லவில்லை. ஹட்ச் நாய் போல தன் பின்னால் அழைவதை கண்ட அந்த பெண், அவள் அப்பாவிடம் சொல்ல, அப்பா இவனை மிரட்ட. சோகத்தில் முடிந்தது அந்த ஒருதலை ராகம்.
சென்னையில் அந்த பெண்ணை சந்தித்த போது, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச, அவள் சென்னையிலேயே வேலை செய்வதாக கூறினாள். தன் அலுவலகத்திற்கு நேரமாவதாகவும் கூறி வேக வேகமாக சென்று விட்டாள்.
யோசித்து பார்க்கையில் வாழ்க்கை எதற்காகவும், யாருக்காகவும் கண்ணீர் சிந்தாமல் சென்றுகொண்டே இருக்கிறது... நண்பனின் புலம்பல்கள், சந்தேகங்கள், டி.வி.எஸ் பயணம் என்ற சுவடுகளை ஏற்படுத்தி போகிறது...
அப்பெண்ணை எங்கு பார்த்தாலும் நண்பனின் காதலி என்றே ஞாபகத்திற்கு வரும்...
நண்பனின் காதலி..( 2 )
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
நல்லா இருந்துச்சு பதிவு!
மிகவும் நன்றி...
Post a Comment