50வது இடுகை – சில நன்றி நவில்தல்..

பல ஜாம்பவான்கள் கலக்கிவரும் பதிவுலகில், சின்னப்பையனாகிய நான் 50தவது இடுகை தாண்டியதற்கு ஒரு பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான், என்ன மன்னிச்சிருங்க !! ஏதோ கொஞ்சம் எழுத ஆரம்பதித்தற்கு காரணமானவர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்கு இந்த இடுகை தேவை.

இனி என் நன்றி பட்டியல்.....
முதலாக வள்ளுவருக்குதான் நன்றி சொல்லனும், எனக்கு வந்த எல்ல மின்னஞ்சல்களை வரிந்துகட்டி முன்னனுப்புதல் (Forward) செய்துவந்த வேளையில், மின் அஞ்சலில் வந்தது திருக்குறளும் அதன் ஆங்கில விளக்கமும். ஆங்கில விளக்கத்தை தலைக்கிழாக படித்தும் ஒன்றும் புரியவில்லை!! இது வேலையாகாது.... என்று, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கம் தந்து, முன்னனுப்புதல் செய்ய ஆரம்பித்தேன். “உருப்படியா ஒரு வேல பண்ற” என்று விமர்சனம் வர !!, பல நண்பர்கள் தங்களுக்கும் முன்னனுப்புதல் செய்ய வேண்ட !!, தமிழ் தெரியாதவர்களும் ஆங்கில விளக்கத்தை வைத்து பாராட்ட !! இன்று வலைப்பதிவு வரை வர வைத்தது.

இரண்டாவதாக அருட்பெருங்கோ, கஷ்டப்படுத்தி தமிழ் எழுதி தமிழ் 99 உபயோகிக்க கற்றுகொடுத்து, பதிவுலகை அறிமுகப்படுத்தி, வலைப்பதிவை உருவாக்க உதவி செய்து; என்னை கைப்பிடித்து பதிவுலகிற்கு அழைத்து வந்தவர். மேலும் கவுஜை, குப்பி போன்ற பல முக்கிய :-) பதிவுலக சொற்களை அறிமுகப்படுத்தியவர்...
மூன்றாவதாக பதிவுலகில் விளையாடி வரும் பல பதிவர்களின் படைப்புக்கள் அதனால் எழுந்த ஆர்வம், சிலரை மொழிகிறேன்...

தமிழ்மண இணைப்பு மற்றும் தொழில்நுட்பம் பற்றி வசந்தம் ரவி, எக்காள பதிவர் TBCD, நையாண்டி லக்கிலுக்(இவரை போல நக்கல எழுதனும்...), 4 பக்கதுக்கு குறையாமல் எழுதும் உண்மை தமிழன்(‘கொடுமுடியில் ஒரு அனுபவம்’... என்னையும் என் நண்பர்களையும் வேறு உலகத்திற்கு கூட்டிச்சென்றது), வாழ்க்கை கதை கூறும் இம்சையரசி, சகப்பதிவர் வீரசுந்தர், சினி பாடல்கள் தரும் தேன்கிண்ணம், தொழில்நுட்ப பி.கே.பி, டோண்டு சார், சேதி கூறும் இட்லி வடை, தமிழ் 2000, ச்சின்னப்பையன், தமிழ் சசி, வவ்வால், பாஸ்டன் பாலா, வால் பையன் இன்னும் பலர். பெயர் விடுப்பட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்..

என்னை ஒரு பதிவராக ஏற்றுக்கொண்டு, பதிவுகளைப் படித்து ஊக்கப்படுத்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றி.....

4 மறுமொழிகள்:

உண்மைத்தமிழன் said...

மெய்புங்காடன்..

தினம் ஒரு குறள் என திருக்குறளை வலையுலகில் அரங்கேற்றி வரும் உமது தொண்டு வள்ளுவனுக்கும், வலையுலகத்திற்கும் சிறப்பு.

அதற்குள் 50-ஆ..?

வாழ்த்துகிறேன்..

தொடருங்கள் உங்களது பயணத்தை..

என்றென்றும் என் அப்பன் முருகன் உங்கள் துணையிருப்பான்..

வாழ்க வளமுடன்

மெய் புங்காடன் said...

உண்மைத் தமிழனா....
மிக்க மகிழ்ச்சி...
நன்றி....

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் மெய்புங்காடன்

மெய் புங்காடன் said...

மிகவும் நன்றி லக்கி...