குறுந்தொகை இன்று..

இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
  நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
  கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
  பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே.

                              -வெள்ளிவீதியார்

விளக்கம்:
  பாறையின் மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் சூரியனின் கதிர்களால் உருக ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருப்பவன் கை இல்லாதவன் அத்துடன் ஊமையும் கூட;
  கைகள் இருந்திருந்தால் வேறிடத்தில் வைத்திருக்கலாம். வாய்இருந்தாலாவது யாரையாவது அழைத்துப் பாதுகாக்கலாம்.
  அதுபோல இக்காதல் நோயை அடக்கிப் பாதுகாக்கவும் இயலவில்லை. பிறரிடம் வெளியிடுவதற்குரிய மனத் திண்மையும் இல்லை.

Explanation:
  A piece of butter is placed on the rock. But due to the hot Sun the butter started melting. A man noticing the melting is dumb and has no hands.
  If he has hands he would have placed butter somewhere; if he is articulative he would have asked for some assistance. (What a pity!!)
  As such, I am neither able to control the “Love Malady”; nor able to disclose that to the world.

P.S.
வெள்ளிவீதியார் ஒரு சங்கப் பெண்பால் கவிஞர்...
Velliveethiar (Author) is a female poet of Sangam Period (2040 years back).

2 மறுமொழிகள்:

கிஷோர் said...

நான் நினைத்தது எப்படி உங்களுக்கு தெரிந்தது?
நேற்று தான் குறுந்தொகை விளக்கம் ஏதும் இருக்கிறதா என்று துழாவிப்பார்த்தேன்.
என்னிடம் இருந்த மு.வ உரையை வீட்டிலேயே வைத்து விட்டேன்.
இணையத்தில் கிடைக்கிறதா?

வாழ்க உங்கள் தொண்டு. கலக்குங்க.
உங்கள் பதிவை என் பதிவில் சுட்டி கொடுக்கப்போகிறேன்.

PS:
Smiley தொல்லை செய்கிறதே, கொஞ்சம் பார்க்கலாமே

மெய் புங்காடன் said...

சிரிப்பான்களை நீக்கிவிட்டேன்...

மடலேருதலை.. கண்டுப்பிடிக்கப்போய் குறுந்தொகை வந்து வாய்த்தது.
நன்றாக இருக்கவும், பதிவேற்றிவிட்டேன்.

கூகிளில் 'குறுந்தொகை' என்று தேடக்கிடைக்கும். உங்கள் பாராட்டுக்கு நன்றி.