தப்பி பிழைக்குமா ஹாக்கி..

பிஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக சிலியில் நடந்த தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி தோற்றது, இதன் மூலம், கடந்த 80 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோனது.

1980துகளில் தொடங்கிய வீழச்சி முழுபரிமாணம் அடைந்து இன்று இந்தியாவிற்கு அவமானம் தேடி தந்துள்ளது. ஒரு காலத்தில், தயா சிங் ஆட்டத்தை பார்த்து, அவர் ஹாக்கி மட்டை வேதியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது போன்ற பொற்காலத்தை இழந்து இந்திய ஹாக்கி கற்காலத்தில் நிற்கிறது.

எந்த ஒரு Chak De வும் ஹாக்கியின் தரத்தை உயர்த்தவில்லை. காலங்காலமாய் வெற்றி பெற்ற இந்தியா, பாக்கிஸ்தான் அணிகள் Astro Turf என்கிற செயற்கை புல்வெளி ஆட்டம், புது யுக்திகள் போன்ற மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கவில்லை. இதன் மூலம் ஆஸ்தேர்லியா, நியுசிலாந்து, அர்ஜன்டீனா போன்ற அணிகள் முன்னிலைக்கு வந்துள்ளன. மேலும் இந்தியரசின் ஆதரவு குறைவு, கிரிக்கெட்டின் எழுச்சி போன்ற காரணங்களும் ஹாக்கிக்கு எதிராக செயல்பட்டன.

உடனே கிரிக்கெட் தான் எல்லாவற்றுக்கும் காரணம் ” என்று கூறுவதை விடுத்து, உண்மையை யோசிக்க வேண்டும். கிரிக்கெட்டிற்கும் அரசு ஆரம்ப காலங்களில் ஆதரவு தரவில்லை, இன்று பி.சி.சி.ஐ வளங்கொளிக்கும் நிறுவனமாயிருக்கிறது. கிரிகெட்டின் வருமானத்தை ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டிற்கு சில சதவீதங்களை ஒதுக்க வழிசெய்ய வேண்டும்.

சார்ல்ஸ்வொர்த் வருகிறார் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.....

0 மறுமொழிகள்: