ஜோதியும் !!! சுணங்கிய அ.தி.மு.க வும் !!!

சசிகலா, மற்றும் அவர் குடும்ப ஆதிக்கம் என்ற திரியை கொழுத்தி போட்டபடி அ.தி.மு.க வை விட்டு வெளியேறிவிட்டார் வக்கில் ஜோதி..

இது ஒன்றும் புதிய செய்தி என்றாலும், அ.தி.மு.க 10 வருடங்களாக வீரியம் குறைந்து காணப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சமிபத்திய சர்சைகளான சிதம்பரம் வழிபாடு, ஆவின் பால் விலையுயர்வு, மின்சார பற்றாக்குறை போன்ற விசயங்களில் முறையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு பா.ம.க காட்டும் எதிர்ப்பில் அரையளவு கூட அ.தி.மு.க காட்டவில்லை.

எம்.பி தேர்தல் நெருங்கிவிட்டாலும், அ.தி.மு.க தன்னை தி.மு.க விற்கு தான் ஒரு சரியான மாற்று என்று சொல்ல தயங்கி நிற்கிறது. அ.தி.மு.க வின் எதிர்ப்புக் குரலாக ‘அம்மா’வின் அறிக்கை மட்டுமே முகங்காட்டி நிற்கிறது. 2ம், 3ம் கட்ட முகங்களின் குரலை கேட்க முடிவதில்லை.

இளைஞர்களின் ஓட்டுக்காக தி.மு.க வும் தே.மு.க வும் போட்டிபோட; பா.ம.க எதிர்க்கட்சியாக செயல்பட; வி. சிறுத்தைகள் போன்ற கட்சிகள் பிரிந்து விட; ம.தி.மு.க ஒதுங்கி நிற்க; அ.தி.மு.க எங்கே நிற்கிறது !!

அ.தி.மு.க தன்நிலை மாற்றி; வினையாற்றினால் தான் உருப்படமுடியும்...

1 மறுமொழிகள்:

Anonymous said...

அதிமுக இலங்கை அரசின் கையை எதிபார்த்தவாறு தெற்கு நோக்கி நிற்கின்றது..

ஒரு கேள்வி?

ஜோதி பதவி கிடைக்கவில்லை விலகுகின்றேன் என வெட்கமில்லாமல் ஆனால் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார். அதிமுகவின் மோசடியிலோ அல்லது கொள்கையிலோ முரன்பாடு இல்லை என்பது தமிழக மக்களுக்கு ஆறுதல் தரும் செய்தி.

புள்ளிராஜா